Sunday, 23 July 2017

மெய்வல்லுனர் போட்டியின் இறுதி நிகழ்வு

(சப்னி அஹமட்)

அம்பாறை மாவட்டத்திற்கான மெய்வல்லுனர் போட்டியின் இறுதி நிகழ்வு நேற்று  (23) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

10 000 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றவர்களுக்கான பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண எதிர்ச்க்கட்சித்தலைவர் எம்.எஸ்  உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிச்செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் இதன் போது கலந்துகொண்டனர்.










haran

No comments: