Friday, 21 July 2017

பத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

ஓட்டமாவடி பிரதான வீதியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளாரென வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


ஓட்டமாவடியைச் சேர்ந்த சுலைமாலெப்பை ஜனூஸ் (வயது 25) என்பவரே விபத்தில் படுகாமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (22) காலை உயிரிழந்துள்ளார்.

இவர், முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, வீதி ஒழுங்குக்கு மாறாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மற்றொரு இளைஞனை விபத்திலிருந்து காப்பதற்காக இவர் ஒதுங்கியுள்ளார்.

அவ்வேளையில், இவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டி, பஸ்ஸொன்றுடன் மோதியமையால் ஏற்பட்ட விபத்த்தில் இவர் படுகாயமடைந்தார்.

எனினும், தவறாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞன் எதுவித காயங்களுமின்றித் தப்பிச் சென்றுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளில் வாழைச்சேனைப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
haran

No comments: