Thursday, 27 July 2017

ஆலையடிவேம்பில் கட்புலன் குறைந்தோருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைப்பு



கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விசேட தேவையுடையோருக்கான உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பார்வைத் திறன் குறைந்த முதியோருக்கு மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச சமுக பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.

Wednesday, 26 July 2017

ஆலையடிவேம்பில் நான்கு மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டு பயிற்சி நிலையம் திறந்துவைப்பு





அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள தர்மசங்கரி மைதானத்தில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நான்கு மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டுப் பயிற்சி நிலையத்தின் திறப்பு விழா நேற்று (26) மாலை இடம்பெற்றது.

Sunday, 23 July 2017

மெய்வல்லுனர் போட்டியின் இறுதி நிகழ்வு

(சப்னி அஹமட்)

அம்பாறை மாவட்டத்திற்கான மெய்வல்லுனர் போட்டியின் இறுதி நிகழ்வு நேற்று  (23) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

Saturday, 22 July 2017

துப்பாக்கிச் சூடு





யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய பின் வீதியில்   இன்று(22)      5.40 மணியளவில் யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்து இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது

Friday, 21 July 2017

பத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

ஓட்டமாவடி பிரதான வீதியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளாரென வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Thursday, 20 July 2017

அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டியில்

haran
அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டியில் தேசிய மட்ட நாடகப்போட்டியில் மட்/மமே/கரடியனாறு மகா வித்தியாலய மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

பஸ்ஸின் நடத்துநர் மீது கத்திக்குத்து

haran
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் நடத்துநர் ஒருவர் மீது, அம்பாறை, திராய்கேணிப் பகுதியில் வைத்து நேற்று (19) மாலை 6.30 மணியளவில் கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

Wednesday, 19 July 2017

விதை நெல் அறுவடை விழா

haran
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் விதை நெல் அறுவடை விழா கரவெட்டி முள்ளாமுனை கண்டத்தில் செவ்வாய்கிழமை (18ஆம் திகதி) நடைபெற்றது.

நிலக்கடலை அறுவடை

மட்டக்களப்பு மாவட்டத்தின்  ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உறுகாமம் வெலிக்காகண்டி பிரதேசத்தில் விதை நிலக்கடலை அறுவடை விழா  வெகு சிறப்புடன் நடைபெற்றது.



Monday, 17 July 2017

இரு மாணவர் குழுக்களிடையே மோதல்

அம்பாறை, ஹாடி உயர்க் கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணை செய்வதற்கு, அந்நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவினர், இன்று (17) நிறுவனத்துக்கு விஜயம் செய்து, விசாரணைகளை முன்னெடுத்ததாக, அதிபர் ஏ.வாறூன் தெரிவித்தார்.

விபத்தில் இளைஞன் பலி

(ஷமி மண்டூர்)

வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட  தும்பங்கேணி திக்கோடை பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற  விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

தும்பங்கேணி திக்கோடை பிரதான வீதியுடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முருகேசு-தனுஜன் (15) மற்றும் தினேஸ்(15) ஆகிய இருவரும் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் இருவரையும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் முருகேசு-தனுஜன் (15) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும்  தினேஸ்(15) என்பவர் சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலுதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
haran

கதிர்காம கொடியேற்றம் 24ஆம் திகதி

haran

வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தனாலயக் கொடியேற்றம் எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறுமென கதிர்காம பஸ்நாயக்க நிலமே வி.ரி.குமாரகே தெரிவித்தார்.

Sunday, 16 July 2017

பொது விளையாட்டு மைதானம்

அகமட் எஸ். முகைடீன்-

பொத்துவில் பொது விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு இனம் காணப்பட்டுள்ள பொத்துவில் சர்வோதாய புர 15 ஏக்கர் காணியை நிலஅளவை செய்து அதனை சுத்திகரிப்புச் செய்வதற்கான மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பணிப்புரையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஸரத்திற்கு விடுத்துள்ளமைக்கு அமைவாக இன்று (15) சனிக்கிழமை குறித்த பிரதேசத்தை பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

உகந்தை முருகன் ஆலயத்திற்கு பஸ்சேவை



கதிர்காமத்திற்குச் செல்லும் பாதயாத்திரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கல்முனை  இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏற்பாட்டில் 14 ஆம் திகதி முதல் உகந்தை முருகன் ஆலயத்திற்கு பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை சாலை முகாமையாளர் வி.ஜௌபர் தெரிவித்தார்.

Saturday, 15 July 2017

தேசிய ஆக்கத்திறன் விருதுக்கான மாவட்ட மட்ட போட்டி


 இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற இந்துசமய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான 2017ம் ஆண்டிற்கான தேசிய ஆக்கத்திறன் விருதுக்கான மாவட்ட மட்ட போட்டி நிகழ்வுகள் 15.07.2017ம் திகதியாகிய இன்று நடாத்தப்பட்டது.

400 மீற்றர் ஓட்டப் பாதை கொண்டு ஒரு மாகாணப் பாடசாலை

haran
“மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மீற்றர் ஓட்டப் பாதை கொண்டு ஒரு மாகாணப் பாடசாலையை வெகுவிரைவில் ஆவண செய்வோம். அதற்கு என்னாலான பங்களிப்பை செய்வேன்” என்று, கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

பெண் கொலை கணவர் கைது

மனைவியை  கொலைசெய்த கணவனை கைதுசெய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

Thursday, 13 July 2017

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

அக்கரைப்பற்றில் பல இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருளற்ற ஆன்மீக அபிவிருத்தியினூடாக மகிழ்ச்சியான குடும்பங்களை உருவாக்குவது தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு



சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் தொழிற்படும் சமுக அபிவிருத்திப் பிரிவின் விழிப்புணர்வூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைத்தல், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஆன்மீக அபிவிருத்தியூடாக மகிழ்ச்சிகரமான குடும்பங்களை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளிலமைந்த விழிப்பூட்டல் செயலமர்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் முழுநாள் பயிற்சியாக இன்று (13) இடம்பெற்றது.

Tuesday, 11 July 2017

வாழ்வாதார உபகரணங்கள் வழங்கல்

மண்முனை பற்று  பிரதேச செயலக  சமுர்த்தி  அபிவிருத்தி  திணைக்களப்பிரிவின்   வாழ்வாதார திட்டத்தின்  கீழ் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு  06.07.2017 அன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

நெல் அறுவடை

கொக்கட்டிச்சோலை கமநலகேந்திர நிலையத்திற்குட்பட்ட பட்டிப்பளையில் நெல் அறுவடை மற்றும் புதிய நெல் அறிமுக நிகழ்வு இன்று(10) திங்கட்கிழமை இடம்பெற்றது.

ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் குரு பூசையை முன்னிட்டு இடம்பெறும் ரத பவனி




ஈழத்துச் சித்தர்கள் வரிசையில் ஸ்ரீ நவநாத சித்தர் மற்றும் ஸ்ரீ பெரியானைக்குட்டி சித்தர்களோடு இணைந்து முப்பெரும் சித்தர்களில் ஒருவராகக் கொள்ளப்படுபவரும், பாரத தேசத்தின் தென்னிந்தியாவிலுள்ள இராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி இராச்சியத்தின் சிற்றரசரின் மகனாக கோவிந்தசாமி எனும் இயற்பெயருடன் அவதரித்து ஈழத் திருநாட்டின் கிழக்கே அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்துக் கலாசாரம் கோலோச்சியிருந்த முல்லை, மருதம், நெய்தல் நிலங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் காரைதீவு கிராமத்தில் தமிழ் வளர்த்த சைவப் புலவர் விபுலானந்த அடிகளார் வாழ்ந்த காலத்தில் அவரது ஆத்மீக நண்பராக இருந்தவரும், பதினெண் சித்தர்களில் ஒருவரான ஸ்ரீ போகர் சித்தரின் அவதாரமாக வந்துதித்து காரைதீவில் குடிகொண்டு சித்துக்களாலும் அற்புத லீலைகளாலும் சைவம் வளர்த்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த 66 ஆவது ஆண்டு நிறைவையும் குரு பூசையையும் முன்னிட்டு காரைதீவிலுள்ள சுவாமிகளது ஜீவ சமாதி ஆலயத்திலிருந்து கிழக்கிலங்கையின் சைவப் பெருமக்கள் செறிந்து வாழும் அட்டப்பள்ளம், திராய்க்கேணி, ஆலையடிவேம்பு, கோளாவில், பனங்காடு, கண்ணகிகிராமம் பிரதேசங்களினூடாக இன்று (11) நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் மாபெரும் சித்தர் ரத பவனியை ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கு வரவேற்கும் சிறப்பு நிகழ்வு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்றது.

Thursday, 6 July 2017

மாணவன்; ஒருவனை, ஆசிரியர் ஒருவர் அவனது வீட்டுக்குத் தேடிச் சென்று தாக்கிய

haran


பன்னிரண்டு வயதுடைய மாணவன்; ஒருவனை, ஆசிரியர் ஒருவர் அவனது வீட்டுக்குத் தேடிச் சென்று தாக்கிய சம்பவமொன்று,

Wednesday, 5 July 2017

ஊடக பயிற்சிப் பட்டறை

haran
(துறையூர் தாஸன்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஊடகப்பிரிவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட காரியாலயமும் இணைந்து,மட்டு அம்பாறை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான இரு நாள் வதிவிட ஊடக பயிற்சிப் பட்டறை,மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய பயிற்சி நிலையத்தில்,கடந்த இரு நாட்களாக(04,05) இடம்பெற்றது.

ஊடகப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றுனர்களாக கலந்துகொண்ட இளைஞர் யுவதிகளுக்கு,பத்திரிகை செய்தி வகைகள்,பத்திரிகைகளுக்கான விசேட கட்டுரைகள்,செய்திகள் எழுதுதல் தொடர்பாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட அறவிப்பாளரும் லேக் ஹவுஸ் நிறுவன சிரேஸ்ட ஊடகவியலாளருமான விசு கருணாநிதியினாலும் வானொலி தொலைக்காட்சித் துறைகளின் வரலாற்று பரிணாம வளர்ச்சி மற்றும் இலங்கை வானொலித் துறையின் வரலாறு சார்ந்து இலங்கைத் தமிழ் ஓசை வானொலி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம்.ஜெசீம் ஆகியோர் முதல் நாள் செயலமர்வை, கலந்துரையாடல் குழுச் செயற்பாடு பாங்கில் முன்னெடுத்திருந்தனர்.

ஊடகத்துறை வரலாறும் பரிணாம வளர்ச்சியும் ஊடகவியல் மற்றும் செய்தியாளர்களின் கடமைகள்,செய்தி அறிக்கைப்படுத்தல் தொடர்பாக சிரேஸ்ட ஊடகவியலாளர் யூ.எல்.மப்ரூக் மற்றும் தொலைக்காட்சி,வானொலி ஊடகங்களில் மொழிப் பயன்பாடு மற்றும் செய்தி வாசிப்பு தொடர்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஸ்ட அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான நசீர் எம்.அகமட் ஆகியோர் இரண்டாம் நாள் கலந்துரையாடல் கருத்தமர்வை வழிநடத்திச் சென்றனர்.

நிருபராக மாத்திரமன்றி தரமான சிறந்த ஊடகவியலாளர்களையும் நெறிமுறை சார் ஊடக கலாசார தர்மத்தை பேணும் நோக்கில்,அடிப்படை பயிற்சி மற்றும் ஆலோசனை வழிகாட்டல்கள்கள் வழங்கப்பட்டதுடன் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளின் ஏனைய கலை கலாசார ஆற்றல்களையும் இதன்போது இனங்காண முடிந்தது.










Tuesday, 4 July 2017

கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக, ரோஹித்த போகொல்லாகம


கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் செயலாளராக நிகமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, போகொல்லாகமவை நியமிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

சுவாமி விபுலாநந்த அடிகளின் ஆவணப் படம் வெளியிட


இலங்கையின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான சுவாமி விபுலாநந்த அடிகளின் வாழ்வு மற்றும் பணிகள் பற்றிய ஆவணப் படம் ஒன்று வரும் ஜூலை 20ஆம் திகதி (20/07/2017) மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் வெளியிடப்படவுள்ளது.

Monday, 3 July 2017

ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட உகந்தை முருகன் ஆலய வளாக சிரமதானம்




கிழக்கிலங்கையில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் ஆலயத்தின் வருடாந்த திருவிழாக்காலத்திற்கு முன்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்பட்டுவரும் சிரமதான வேலைத்திட்டமும் விசேட பூஜை வழிபாடுகளும் இம்முறை கடந்த (ஜூன்) 30 மற்றும் (ஜூலை) 01 ஆம் திகதிகளில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றன.