Monday, 28 December 2020
06 கோடியே 45 இலட்சத்து 40ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள்
Sunday, 20 December 2020
ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.
வி.விபுர்தன்
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாகவும் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.
Wednesday, 16 December 2020
Saturday, 12 December 2020
இலங்கையில் 10% பேருக்கு கொரோனா தடுப்பூசி: உலக சுகாதார ஸ்தாபனம்
இலங்கை சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு கொரோனா தொற்று ஒழிப்பிற்கான தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.
Friday, 11 December 2020
பல்கலைக்கழக பதிவுகளுக்கான கால அவகாசம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு
2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான பதிவுகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!
கிழக்கு மாகணத்தில முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது
சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவர் நேற்று இவ்வாறு உ யிரிழந்துள்ளார் இதனை
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
Thursday, 10 December 2020
Covid – 19 தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்
Covid – 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழமாக காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவுசெய்யுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Wednesday, 9 December 2020
கொரோனா தடுப்பூசியை யாரெல்லாம் ஏற்றிக்கொள்ள கூடாது – ஆய்வு தகவல்.
குறிப்பிடத்தக்க ஒவ்வாமைகள் காணப்படும் நபர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டாம் என பிரித்தானிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Pfizer மற்றும் BioNTech நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பிரித்தானியாவில் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது.
24 மணி நேரத்தில் கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்
நாட்டில் நேற்றைய தினம் (08) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 798 பேரில் 526 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID-19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.கம்பஹா மாவட்டத்தில் 97 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 06 பேரும் கண்டி மாவட்டத்தில் 40 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Tuesday, 8 December 2020
ஜோ பைடனால் 100 நாட்களில் 100 M கொரோனா தடுப்பூசிகள் எனும் இலக்கு நிர்ணயம்.
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது முதல் 100 நாட்களில் 100 மில்லியன் COVID – 19 தடுப்பூசிகள் எனும் இலக்கை நிர்ணயித்துள்ளார்.
கிழக்கில் இன்று 55 பேருக்கு கொரோனா ! அக்கரைப்பற்று - 37 ! கிழக்கில் இதுவரை 457 ஆக அதிகரித்துள்ளது .அக்கரைப்பற்றிலயே அதிகளவானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
உலகின் முதலாவது கொரோனா தடுப்பு ஊசி இன்று பிரித்தானியாவில் ஏற்றப்பட்டது. மகிழ்ச்சியில் உலகம்.
திருக்கோவிலில் முகக்கவசம் அணியாத 15 பேர் கைது . நீதிமன்றத்தினால் தலா 2000 ரூபா அபராதம் !
திருக்கோவில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் திருக்கோவில் பொலீஸ் பொறுப்பதிகாரி ஜெயவீர தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் வீதியில் முகக் கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 15 நபர்கள் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எச். எம். ஹம்ஸா ஒருவருக்கு தலா 2000 ரூபா அபராதம் விதித்தார். மொத்தமாக 30,000 தண்டப்பணம் விதிக்கப்பட்ட்து .
தரம் குறைந்த சனிடைசர்களின் விற்பனை அதிகரிப்பு-கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர்
எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாத தரம் குறைந்த தொற்று நீக்கி (சனிடைசர்கள்) சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர், பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்
பிசிஆர் பரிசோதனை கட்டாயம்
அம்பாறை, கல்முனைப் பிராந்தியத்தில் பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களில் எதிர்காலத்தில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கட்டாயம் பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் பெற்றுகொள்ள வேண்டுமென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்தார்
அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய பிரதேசங்களிலுள்ள வியாபாரிகள் கட்டாயம் அந்தந்த சுகாதார வைத்தியதிகாரியுடன் தொடர்புகொண்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு, அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறும்
புதிதாக வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு பிசிஆர் சான்றிதழ் அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்குட்பட்ட 13 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் வியாபாரிகளுக்கும் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் நாளாந்தம் எழுமாறாக பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் பிசிஆர் பரிசோதனைக்கு மறுப்புத் தெரிவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமெனவும் தெரிவித்தார்.
இளைஞன் ஹெரோயினுடன் கைது
Tuesday, 3 November 2020
தாலியினை பறித்தெடுத்த திருடன்
தாலியை
Friday, 30 October 2020
மின்னலில் கணவனும் மனைவியும் பலி
Monday, 19 October 2020
நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம்
நிமலராஜனின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, 20 சிட்டிகளில் சுடரேற்றி, மலரஞ்சலியும் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டன.
“நெல் நாற்று நடுகை”
அம்பாறை மாவட்டத்தில் அதிக விளைச்சலையும் மிக உச்சக்கட்ட பயனையும் தரக்கூடிய “நெல் நாற்று நடுகை” மூலமான நெற்செய்கையை, விவசாயிகள் மத்தியில் விழிப்புணா்வையும் ஆலோசனையும் களப்பயிற்சிகளையும் விவசாய திணைக்களம் நடத்தி வருகின்றது.
Monday, 12 October 2020
கிளினிக் ,மருந்து வகைகளை அவர்களது வீடுகளுக்கே
Sunday, 4 October 2020
Saturday, 26 September 2020
பலத்த காற்றினால் 03கடைகள் சேதம்,
சிறுவன் உயிரிழந்துள்ளான்.
ஊடக வியலாளர்கள் பயிற்றுவிப்பு
துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தயாரிப்பு சொட்கண் ரக துப்பாக்கியொன்று மைதானம் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த துப்பாக்கி இன்று (22) காலை சம்மாந்துறை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ரத்னமல தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தி இத்துப்பாக்கியை மீட்டுள்ளனர். குறித்த இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கியுடன் 6 ரவைகளும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது மீட்கப்பட்ட துப்பாக்கி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச சைகை மொழி
பொலிஸாரின் திடீர் சோதனை
வியாழக்கிழமை(24) இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை புறநகரப்பகுதி, கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இத் திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது ,தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையானது அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன் போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து கல்முனை, சம்மாந்துறை, சவளைக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து முக்கிய சந்திகள், பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்
Wednesday, 23 September 2020
பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியின் அதிபராக முருகமூர்த்தி சபேஸ்குமார்!!!
Sunday, 6 September 2020
தீப்பற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு
Tuesday, 1 September 2020
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
Thursday, 27 August 2020
Saturday, 22 August 2020
மகா கும்பாபிஷேகம்
Monday, 17 August 2020
தெரிவுசெய்யப்பட்டவர்கள் பட்டியல் Alayadivembu :-
தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம்
தெரிவுசெய்யப்பட்டவர்கள் பட்டியல்
Alayadivembu : https://drive.google.com/file/d/10J9X4yHE3D5xjXiTFUArIcH3h_o6rcI-/view?usp=sharing
அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று(17) மீண்டும்
சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என களனி பல்கலைக்கழகத்தின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை மாதம் 18 ஆம் திகதி மாலை 5 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, 19 July 2020
Saturday, 18 July 2020
Saturday, 11 July 2020
Friday, 1 May 2020
ஊடகவியலாளர் சிவராம் நினைவு தினம்
Thursday, 30 April 2020
Wednesday, 29 April 2020
தனிமைப்படுத்தப்பட்டிருந்த 75 பேர் விடு வந்தனர்
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் நேரடி மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைப் பேணியவர்கள் என இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 75 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து நேற்று (28) தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Tuesday, 28 April 2020
Sunday, 12 April 2020
அக்கரைப்பற்றில் பெண்ணொருவருக்கு கொரோனா
(W. டிக்க்ஷித்) (பாறுக் ஷிஹான்)
அக்கரைப்பற்றில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றியுள்ளனமை இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.