Saturday, 26 September 2020

வர்த்தக நிலையம் முற்றுகை

வர்த்தக நிலையம் முற்றுகை விசேட சோதனையில் சிக்கியது பொருட்கள் 



திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் வரும் சந்தைப்பகுதியில் அமைந்துள்ள  வர்த்தக நிலையமொன்றில் நேற்று(21) பொதுமக்களது முறைப்பாட்டினை அடுத்து விசேட சுற்றிவளைப்பு ஒன்று இடம்பெற்றது.

மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ் .மகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இச்சுற்றிவளைப்பின்  போது குறித்த வர்த்தக நிலையத்தில் மனித பாவனைக்கு ஒவ்வாதது என அடையாளம் காணப்பட்ட பல உணவு மாதிரிகள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.

 இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு   கைப்பற்றப்பட்ட உணவு மாதிரிகளில் வண்டுகள் ,புழுக்கள் உயிருடன் காணப்படதை தொடர்ந்து அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு   கொழும்பு உணவு பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பெறுபேறுகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மேற்பார்வை  பொது சுகாதார  பரிசோதகர் எஸ் .மகேஸ்வரன் தெரிவித்தார்

இதன்போது குறித்த வார்த்தக  நிலையத்தில் பல உணவு மாதிரிகளின்  மீது தூசுகள் படிந்திருப்பதனையும் குளிர்சாதனப்பெட்டி  துப்பரவு இன்றி காணப்பட்டதனையும் அவதானித்த பொதுசுகாதார பரிசோதகர்கள் இவற்றை துப்பரவாக்கி பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியிருந்தனர் 

  இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுகின்ற பட்சத்தில் பொதுமக்கள் எவ்விதமான பாரபட்சமின்றி எவ்வித தயக்கமுமின்றி தமது முறைப்பாடுகளை பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சபை போன்றவற்றிற்கு எடுத்துக்கூற முடியும் என்பதுடன்   இவ்வாறு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிற பொழுது எமது சேவையை சுகாதார தரப்பினர் ஊடாக சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும் எனவும் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ் .மகேஸ்வரன் மேலும் தெரிவித்தமை  குறிப்பிடத்தக்கது

No comments: