Tuesday, 8 December 2020

ஜோ பைடனால் 100 நாட்களில் 100 M கொரோனா தடுப்பூசிகள் எனும் இலக்கு நிர்ணயம்.

CORANA VIRUS

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது முதல் 100 நாட்களில் 100 மில்லியன் COVID – 19 தடுப்பூசிகள் எனும் இலக்கை நிர்ணயித்துள்ளார்.

COVID – 19 தொற்றை கட்டுப்படுத்தும் தமது திட்டம் தொடர்பில், டெலாவரேயில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

தமது 100 நாட்கள் திட்டத்தில், தொற்றை முழுமையாக ஒழிக்க முடியாது என தெரிவித்துள்ள பைடன், அது தொடர்பில் உறுதியளிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

எனினும், 100 நாட்களில் நோயின் தன்மையை மாற்ற முடியும் எனவும் அமெரிக்க மக்களின் வாழ்வை மாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் நிர்வாகத்தினால் கொரோனா ஒழிப்பிற்கான சிறந்த திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்த ஜோ பைடன், தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தமது பாரிய திட்டத்தின் சில விடயங்களை நேற்று அறிவித்துள்ளார்.

இதேவேளை, தடுப்பு மருந்து தேவையான அனைத்து அமெரிக்கர்களுக்கும் அவை நிச்சயமாக வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அடுத்து மாதம் நடுப்பகுதியில் சுமார் 24 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படலாம் என ட்ரம்ப் நிர்வாகம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

No comments: