Tuesday, 8 December 2020

உலகின் முதலாவது கொரோனா தடுப்பு ஊசி இன்று பிரித்தானியாவில் ஏற்றப்பட்டது. மகிழ்ச்சியில் உலகம்.

COVID-19

பரிசோதனை நடவடிக்கைகளைக் கடந்து, கோரோனா தடுப்பூசி முதல் தடவையான பிரித்தானியாவில் இன்று மாக்கிரட் கீனன் என்ற 90 வயது பெண்மணிக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே முதலாவது கொறோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட பெண்மணி என்ற பெருமையைப் பெறுகின்றார் மாக்கிரட் கீனன்.

பிரித்தானியாவில் தமிழ் மக்கள் பெருமளவில் வசிக்கும் கொவென்ரி என்ற இடத்தில் வகித்துவரும் இந்த மூதாட்டிக்கு இன்று பிரித்தானிய நேரம் காலை 06.31 மணியளவில் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மார்கிரட், 'ஒரு வருட தனிமைப்படுத்தலுக்குப் பிறகு தான் தனது குடும்பத்தை சந்திக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடத்தை தனது குடும்பத்தினருடன் மகிழச்சியாகக் கொண்டாடுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு தான் மகிழச்சியடைவதாகவும்' தெரிவித்தார்.

80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலிலும், முதியோர் இல்லங்களில் தங்கியிருப்வர்களுக்கு அடுத்ததாகவும், மருத்துவ முன்னயில் பணியாற்றுவேருக்கு அதற்கு அடுத்ததாகவும் கொரோறா தடுப்பூசி செலுத்துவதற்கு பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.

உலகிலேயே முதன் முதலாக பிரித்தானியாவிலேயே கொறோனா தடுப்பு ஊசி உத்தியோகபூர்வமாக செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments: