Sunday, 12 April 2020

அக்கரைப்பற்றில் பெண்ணொருவருக்கு கொரோனா

haran

(W. டிக்க்ஷித்) (பாறுக் ஷிஹான்)

அக்கரைப்பற்றில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றியுள்ளனமை இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.



கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை(12) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற நிலையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் மேலும் தனது கருத்தில்


அண்மையில் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கட்டார் நாட்டுக்கு சென்று நாடு திரும்பியுள்ளார். அதன் பின்னர் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

எமது பிராந்திய சுகாதார பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்றில் கடந்த சில தினங்களுக்கு முன் நபர் ஒருவர் குறித்த நோய் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டு பொலனறுவை பகுதியில் உள்ள ஆதார வைத்தியசாலையின் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றார் மேலும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் பத்து நபர்கள் பொலநறுவையில் அமைந்துள்ள தனிப்பட்ட சிறப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்கள் .இதில் எமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தொற்றுக்குள்ளானவரின் மனைவி தற்போது அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்.இதனால் அந்த நோயாளியின் மனைவி தற்போழுது தனிமைப்படுத்தப்பட்டு மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஏனைய அந்த ஒன்பது நபர்களின் 7 பேருக்கு இந்த நோய் இல்லை என்ற நெகட்டிவ் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.தொடர்ந்து அவர்கள் அந்த தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கின்றார்கள் .எனினும் மற்றுமிருவரின் சிகிச்சை முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை .அதாவது வான் சாரதியும் அவருடன் இருந்த உதவியாளர் ஆவர்.மேலும் அடையாளம் காணப்பட்ட மனைவியுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் 55 பேரையும் விசேட கவனத்தைச் செலுத்தி இருந்தோம் என குறிப்பிட்டார்.

No comments: