Friday, 1 May 2020

கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகை

haran
(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு களப்பு பகுதியில் இன்று(01) வெள்ளிக்கிழமை கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றுவளைப்பிலேயே குறித்த, கசிப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது, 5வரல்களில் இருநூறாயிரம் மில்லிலீற்றர் கோடா மீட்கப்பட்டதுடன், உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் அடுப்பு, கோஸ் போன்றனவும் மீட்கப்பட்டதாக் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்பு பகுதியில் அண்மைக்காலங்களாக கசிப்பு நிலையங்கள் பல முற்றுகையிடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



முனைக்காடு களப்பில் கசிப்பு நிலையம் முற்றுகை Rating: 4.5 Diposkan Oleh: NEWS

No comments: