திருக்கோவில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் திருக்கோவில் பொலீஸ் பொறுப்பதிகாரி ஜெயவீர தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் வீதியில் முகக் கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 15 நபர்கள் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எச். எம். ஹம்ஸா ஒருவருக்கு தலா 2000 ரூபா அபராதம் விதித்தார். மொத்தமாக 30,000 தண்டப்பணம் விதிக்கப்பட்ட்து .
மேலும் இவ்வாறான நோய் தொற்றுக்கு உடந்தையாக சம்பவத்தில் கைது செய்யப்படடால் கட்டாய சிறைத்தண்டனை வழங்கப்படும் என கடுமையான தொனியில் எச்சரிக்கப்பட்டு தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார் .
திருக்கோவில் சுகாதார பிரிவில் இதுவரை 8 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள battinews பேஸ்புக் பக்கத்தை லைக் செய்துகொள்ளுங்கள் -
No comments:
Post a Comment