Tuesday, 8 December 2020

இளைஞன் ஹெரோயினுடன் கைது





பேலியகொட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்த வீதி பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.





இதன்போது பேலியகொட பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 5 கிராம் 8 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரான இளைஞன் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





haran

No comments: