Tuesday, 28 April 2020

கொரோனா தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை

haran

(வி.சு)
கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.



ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 12 நாட்களின் பின்னர் இன்று தளர்த்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் ஏற்படுத்தப்பட்ட சந்தை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த நாட்களில் அக்கரைப்பற்று சாகாம வீதி ஓரங்களில் பரீட்சார்த்தமான முறையில் அமைக்கப்பட்ட சந்தை வெற்றியளிக்கவில்லை. இங்கு சமூக இடைவெளி என்பதும் பின்பற்றப்படாத நிலை காணப்பட்டது. இதனை கருத்தில் கொண்டே சந்தையினை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திற்கு இன்று மாற்றினோம்.

இத்திட்டமானது எமக்கு வெற்றியளித்துள்ளது. இங்கு பரந்தளவான இட வசதி காணப்படுவதால் மக்கள் சமூக இடைவெளியை பேணி பொருட்கொள்வனவில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இச்செயற்பாடானது தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.

எக்காரணத்தை கொண்டும் கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை இத்திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படாது எனவும் உறுதியளித்தார்.
கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: