Wednesday, 8 April 2020

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது நோயாளி பதிவு

haran

ஆர் .நடராஜன்

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளி அக்கரைப்பற்று பிரதேசத்தில்  இனங்காணப்பட்டுள்ளார்



அண்மையில் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுவந்திருந்த இவருக்கு கொரோனா தொற்றியிருப்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது

இவர் சிகிச்சைக்காக வெலிக்கந்தைக்கு அனுப்பப்படவுள்ளதாக அறியமுடிந்தது.முன்னதாக இவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்று திரும்பியதாகவும் 14 நாட்கள் கழிந்த பின்னரே இவருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

தனிமைப்படுத்தல் முடிந்து வீடு திரும்பிய இவர் பலருடன் பழகி இருப்பதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க சுகாதார தரப்பு தயாராகி வருகிறது.இவருடன் இந்தியா சென்று திரும்பிய மேலும் 7 பேர் தொடர்பிலும் ஆராயப்படுகிறது.

No comments: