Thursday, 30 April 2020

வீட்டுத்தோட்டங்களை அமைப்போம்

haran


'சௌபாக்கியா' எனும் 10 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அமைப்போம் எனும் தொனிபொருளில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.




இதற்கமைவாக தம்பிலுவில் கமநல சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வீட்டுத்தோட்ட செய்கையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் விதைப் பொதிகள்; வழங்கும் நிகழ்வு நேற்று (29) திருக்கோவில் மண்டானை கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தம்பிலுவில் கமநல சேவை வலயத்தின் உதவிப்பணிப்பாளர் தேவராணி ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன் விவசாயப்போதனாசிரியர் என்.சுந்தரமூர்த்தி தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.சயரூபன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது வீட்டுத்தோட்ட செய்கையாளர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விதைப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் விவசாயிகளை முன்னேற்றும் முகமாக வயல் நிலங்களின் வரம்புகளில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான பயிர் விதைகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




'சௌபாக்கியா' எனும் 10 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அமைப்போம் வேலைத்திட்டம் திருக்கோவில் மண்டானை கிராமத்தில் Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: