Sunday, 19 July 2020

தேர்தல் சட்ட மீறல்கள் இருப்பின் அழையுங்கள் - 1933

haran
தேர்தல் சட்ட மீறல்கள் இருப்பின் அழையுங்கள் -  1933




தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கென விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

அதற்கமைய பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கை பிரிவில் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


1933 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல்களை வழங்க முடியுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அதற்கு மேலதிகமாக 
0112 472 757 , 0112 345 553 என்ற தொலைபேசி இலக்கங்கள் அல்லது 0112 327 706 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியுமென பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. 

No comments: