மாணவர்களின் கல்வியும் ஆன்மீக விழுமியங்களும் பயிற்சிநெறி
ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் பிரதேச மாணவர்களுக்கான விழுமியக் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக விசேட செய்முறை பயிற்சி எதிர்வரும் 25ம் திகதி இடம்பெறவுள்ளது
பாடசாலை மாணவர்களின் எதிர்கால வாழ்வியலில் சுபிட்ஷத்தை மலரச் செய்வதில் சில ஆக்கபூர்வமானதும் அவர்களின் வாழ்நாள் வரைக்கும் பயன்படக்கூடியதுமான கல்வி மற்றும் ஆன்மீக செயற்பாடுகளினை இனம் கண்டு நடைமுறைப்படுத்துவதன் பிரதான நோக்கமாகக் கொண்டு அகில இலங்கை இந்து மாமன்றம் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் வளவளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த கலாநிதி தமிழருவி பேராசிரியர் வே. சங்கரநாராயணன் அவர்களின் பங்குபற்றலுடன் மிகவும் சிறப்பான முறையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற தலைவர் கனகரத்தினம் தெரிவித்தார்
No comments:
Post a Comment