Thursday, 21 March 2019

ஸ்ரீ பாசுதேசுவரர் திருத்தலத்தின்




அம்பாறை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றாகவும் முப்பெரும் சித்தர்களில் ஒருவரான சித்தானைக்குட்டி சுவாமிகளினால் கோடிட்டு அடியெடுத்து கொடுத்து அமைக்கப்பட்டதுமான பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுதேசுவரர் திருத்தலத்தின் சங்காபிசேகம் நேற்று(20) நடைபெற்றது.













கடந்த (12) ஆம் திகதி ஷஷ்டி திதி, கார்த்திகை நட்சத்திரம், வைதிருதியோகம் கூடிய சுபவேளை பகல் 11.10மணியளவில் இடம்பெற்ற கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழா 9 நாட்களாக இடம்பெற்றுவரும் திருவிழாவுடனும் 21ஆம் திகதி இன்று நடைபெறும் பங்குனி உத்தர தீர்த்தோற்சவத்துடனும், 23ஆம் திகதி நடைபெறும் வைரவர் பூசையுடனும் நிறைவுறும்.

நேற்று காலை இடம்பெற்ற மூலமூர்த்தவருக்கான பூஜையை தொடர்ந்து சங்காபிசேக கிரியைகள் ஆரம்பமாகின. தொடர்ந்து பிரதான கும்ப வெளிவீதி உலா நடைபெற்றதுடன் பிரதான கும்பம் மூலமூர்த்தவர் மீது பக்தர்களின் அரோகரா வேண்டுதலுடன் சொரியப்பட்டது.
பின்னர் கொடித்தம்ப பூஜையும் வசந்த மண்டப பூஜையும் நடைபெற்றது. நிறைவாக அழகிய தேரில் எழுந்தருளிய மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுதேசுவரரை மங்கள மேளவாத்தியங்கள் முழங்க உள்வீதிவலமாக பக்தர்கள் தூக்கிச் சென்றதுடன் மீண்டும் வசந்த மண்டபத்தில் அமர்ந்தப்பட்டார். தொடர்ந்து தீப ஆராதனைகளும் இடம்பெற்றதுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆலய தலைவர் மா.இரகுநாதன் தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு ஈசான சிவாச்சாரியார் கிரியாதிலகம் சிவஸ்ரீ அ.மூர்த்தீஸ்வரக்குருக்கள் தலைமையில் கிரியாஜோதி சிவஸ்ரீ ஜனேந்திரராஜ் மற்றும் உதவிக்குருமார்களான சுஜிதசர்மா, மா.பரமேஸ்வரன் ஆகியோர் நடாத்தி வைத்தனர்.

இதேவேளை ஆலய முன்வளாகத்தில் ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கி முகாமையாளர் கே.அசோக்குமார் தலைமையில் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை கட்டமைப்பினர் இணைந்து தாகசாந்தி ஏற்பாடென்றினையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.









No comments: