இயந்திரங்கள் பற்றாக்குறையால் அறுவடை நெல் வயல்கள் பாதிப்பு
அம்பாறை மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டிரு ந்த போதும் காலநிலை மாற்றத்தின் காரணமாக பெய்துவந்த மழையினை தொடர்ந்து அறுவடை செய்யப்படவிருந்த நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அறுவடை இயந்திரங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது
அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி மற்றுமு; மருதமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெல் வயல்கள் தொடர்சியாக அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட் டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்வாறு கடின முயற்சியின் பயனாக அறுவடை செய்யப்படுகின்ற நெல்லினை விற்பனை செய்வதில் தளம்பல் நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கதுharan
No comments:
Post a Comment