Thursday, 28 March 2019

இரு மாணவிகள் மாயம்




எஸ். அபிவரன்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்துக்கு கல்வி கற்க சென்ற 17 வயதுடைய இரு மாணவிகள் கடந்த 22 திகதி; காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கோயில் போராதீவைச் சேர்ந்த ஒரே வீதியில் வசிக்கும் குறித்த மாணவிகள் சம்பவதினமான கடந்த 22 ம் திகதி வீட்டில் இருந்து வழமைபோல மாலை களுவாஞ்சிக்குடி நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு கல்வி கற்பதற்காக சென்றிருந்தனர்.

இந்நிலையில் அன்றைய தினம் இரவு ஆகியும் குறித்த மாணவிகள் வீட்டுக்கு திரும்பாததையடுத்து பெற்றோர் அவர்களை தேடும்பணியில் ஈடுபட்ட நிலையில் மாணவிகள் காணாமல் போயுள்ளதாக 25 ம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: