Thursday, 14 March 2019

210 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளை




ச.அபிவரன்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதியாக உள்ள கணவருக்கு சாப்பாட்டிற்குள் பொரித்த மீன் நடுப்பகுதிக்குள் 210 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளை வைத்து கொடுக்க முயன்ற மனைவியான பெண் ஒருவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை (13) பகல் கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்தாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்..


அக்கரைப்பற்று ஆலம்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் போதைப் பொருளுடன் அண்மையில் கைது செய்து மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த நபரின் மனைவி கணவனை பார்ப்பதற்காக சம்பவ தினமான இன்று (13) புதன்கிழமை பகல் 12 மணியளவில் சிறைச்சாலைக்கு சாப்பாட்டுடன் சென்றிருந்தார்

இதனையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த சாப்பாட்டை சோதனை செய்தபோது அதில் பெரித்த மீனின் குடல் பகுதியில் சூட்சமமான முறையில் 210 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளை மறைத்து எடுத்துவந்துள்ளதை கண்டுபிடித்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பெண்ணை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர் .

கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


No comments: