பல ஆண்டுகளாக சுத்தமான குடிநீர் இன்றி அவதியுற்ற மண்முனை தென்மேற்கு பிரதேச மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குழாய் நீர் விஸ்தரிப்பு பணிக்கமைவாக சுத்தமான குடிநீர் இணைப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளதாக அதன் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதன் முதற்கட்டமாக இதுவரை குழாய் பதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் தமக்கான குழாய் நீர் இணைப்பினை தற்போது பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதோடு ஏனைய பகுதி மக்கள் அவர்களது உள்ளக வீதிகளுகுக்கான நீர் விநியோக குழாய் பதிக்கப்பட்டதும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் மேலும் பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.
haran
No comments:
Post a Comment