Sunday, 3 March 2019

மகா சிவராத்திரி

பனங்காடு பாசுபதேஸ்வரர் ஆலயத்தில்  (நேரலை ...)



பனங்காடு  பாசுபதேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரின் ஒழுங்கமைப்புடன் ஆலய  பிரதம குரு மூர்த்தீஸ்வரர் குருக்களினால் நான்கு சாம பூஜைகளும் மிகவும் சிறப்பாக இடம்பெறும்   இந்நிகழ்வில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வெளியீடான சிவ வழிபாட்டு மலர் மற்றும் மாசி மாத மகத்துவம் மகா சிவராத்திரியும் எனும்  கையோடு வழங்கிவைக்கப்படவுள்ளது 






சிவசக்தி அம்சம் கொண்ட நாளாகப் போற்றப்படும் மஹா சிவராத்திரி என்ற சுடர் மொழியினைக் கொண்ட பெருமை மிக்க சிவனுக்கு உரிய இரவு எனப் பொருள் படும் மகா சிவராத்திரி விரதப் பூஜைகள்  உலகம் பூராவும் உள்ள இந்து மக்களால் புனிதமாக அனுஸ்டிக்கப்படுகின்றது 


சிவராத்திரியானது மகாசிவராத்திரி ,ஜோகசிவராத்திரி ,நித்தியசிவராத்திரி , மாத சிவராத்திரி , பட்சசிவராத்திரி , என ஜய்து வகைப்படும் 

இதில் ஆண்டு தோறும் மாசி மாத தேய்பிறை (04) திகதியில் அதாவது கிருஷ்ண பட்சத்து சதுர்த்தியில் வரும் விரதமாகும்   இது பற்றி 27 ஆகமங்களிலும் இதன் சிறப்பினை நாம் பார்க்கக்கூடியதாகவுள்ளது

 மாவடடத்தில் அனைத்து இந்து ஆலயங்களிலும் குறிப்பாக பனங்காடு பாசுபதீசுவரர் ஆலயம் தம்பிலுவில் சிவன் ஆலயம் காரைதீவு சிவன் ஆலயம் கொக்கட்டிசோலை தான்தோன்றிய்ஸ்வரர் போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களில் சிறப்பாக இடம்பெறுகின்றது\

மகா சிவராத்திரியை முன்னிட்டு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வெளியீடான சிவ வழிபாட்டு மலர் பக்தர்களுக்கு இலவசமகா விநியோகம் செய்யப்படவுள்ளது  ,ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் மகாசிவராத்திரி நிகழ்வானது இன்று(04) விளம்பி வருடம் மாசித் திங்கள் இருபதாம் நாள் பனங்காடு பாசுபதேஸ்வரர் ஆலயத்தில் இந்து மாமன்றத்தின் தலைவர் கனகரத்தினம் தலைமையில் இடம்பெறுகின்றது 

மக்களின் ஆன்மீக விழிப்புணர்வுகளை மேலும் மலரச் செய்யும் நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக 
அன்றைய தினம் ஆலய பரிபாலன சபையின் ஒருங்கமைப்பு டன் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தரும் ஆண்மீக சொற்பொழிவாளர் கருணாகரனின் செயற்பொழிவுகளும்  இதேவேளை அம்பாறை மாவடட  மூத்த ஊடகவியலாளர் ஆர்.  நடராஜா அவர்களினால்  சிவபுராணம் எனும் நூலும் இலவசமாக வழங்கப்பட வுள்ளமை  குறிப்பிடத்தக்கது

பொதுவாக  சிவராத்திரி தினத்தில் பலனாக எமது முன் ஜென்ம பாவங்கள் விமோசனம் கிடைப்பதுடன் இன்றைய வாழ்விற்கும் அடுத்த ஜென்ம வாழ்விற்கும் நற்பலன் கிடைப்பதுடன் இப் பூவுலகில் நல்வாழ்வு கிடைப்பதற்கு இந்த சிவராத்திரி விரதம் வழிவகுக்கட்டும் 


haran

No comments: