Saturday, 16 March 2019

முதிய பெண்மணி ஒருவருக்கு வீடு




மு.கோகிலன்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஈழத் தமிழர் உதை பந்தாட்ட சம்மேளத்தினால் மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வீடற்ற வறிய நிலையில் வாழும்முதிய பெண்மணி ஒருவருக்கு வீடு வழங்கும் முகமாக  அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (16) இடம்பெற்றது.



கிராம உத்தியோகஸ்த்தர் இ.அச்சுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரான்ஸ் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் த.சங்கரராஜா,வடமாகாண உதைபந்தாட்ட இணைப்பாளர் பா.காந்தரூபன்,ஆசிரியர் எஸ்.மங்களதர்ஷன் ஆகியோர்கள் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.









haran

No comments: