Saturday, 2 March 2019

சோபிதாவின் சாதனை ....

தேசிய ரீதியில் முதலிடத்தில் கிருஷ்ணபிள்ளை சோபிதா

அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதியுயர் (சுப்ரா) தரத்துக்குப் பதவியுயர்வு வழங்குவதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில், அக்கரைப்பற்று 09ஆம் பிரிவைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சோபிதா, 361 புள்ளிகளைப் பெற்று, தேசிய ரீதியில் முதலிடத்தில் சித்தியடைந்துள்ளார்.

(எமது வாழ்த்துக்கள்)





பரீட்சைகள் திணைக்களத்தால், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதமளவில், நாடாளவிய ரீதியில் நடத்தப்பட்ட இப்போட்டிப் பரீட்சையில், தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தோற்றிய பரீட்சார்த்திகளுள், தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற நிலையிலேயே, இவர் சித்திடையந்துள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவுப் பட்டதாரியான செல்வி சோபிதா, அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில், கடந்த 2005ஆம் ஆண்டு இணைந்துகொண்டதுடன், தற்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருகின்றார்.

மேற்படி போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, புள்ளி அடிப்படையில் முன்னணியிலுள்ள 148 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ள பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, திறமை ஒழுங்கின் அடிப்படையில், அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் உயர் தரத்திலுள்ள 143 வெற்றிடங்கள் நிரப்பப்படுமென அறிவித்துள்ளது


No comments: