Saturday, 2 March 2019

வைத்தியசலையினை தரமுயர்த்துமாறு கோரிக்கை

வைத்தியசலையினை தரமுயர்த்துமாறு கோரிக்கை 




ஆலையடிவேம்பு பனங்காடு  பிரதேச வைத்தியசாலையினை  தரமுயர்த்தி தருமாறு நல்லாட்ச்சி அரசிடம் மக்கள் வேண்டு கோள்விடுத்துள்ளனர்  ஆலையடிவேம்பு  பிரதேசத்துக்குட்பட பனங்காடு வைத்தியசலையானது மிகவும் முக்கியமான மக்கள் செறிந்து வாழும் கேந்திர நிலையத்தில் அமைந்துள்ளது



குறிப்பாக எல்லைப்பிரதேசமான சாகாமம்  ,அளிக்கப்மை ,புளியம்பத்தை ,மற்றும் கண்ணகிபுரம் ,மகாசக்தி குடியேற்றம் பனங்காடு கோளாவில் ,தீவுக்காலை ,அகத்திக்குளம் இந்தியடி ,ஆலையடிவேம்பு, மகாசக்தி,  போன்ற பல கிராமங்களின் மிக முக்கிய மருத்துவ நிலையமாக காணப்படுவது இவ் வைத்தியசலை ஆகும் இரவு நேரங்களில் யானைகளினால் மற்றும் விஷஜந்துக்களினால் தாக்கப்படும் விவசாயிகள் அவர்களது பெறுமதி வாய்ந்த உயிர்களை காப்பாற்ற இவ் வைத்தியசாலை மிகவும் முக்கியமானதாகும் 
 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இவ் வைத்தியசாலியினை தரமுயர்த்தி சிறந்த மருத்துவ சேவையினை பெற்றுத்தர சுகாதார தரப்பினர் அமைச்சுக்களுக்கு இதனை தெளிவுபடுத்த வேண்டும் என்பதுடன் இது தொடர்பான ஆவணப்படுத்தல் கடிதம் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சுக்களுக்கும் அபிவிருத்தி சங்கத்தினரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

haran

No comments: