Thursday, 28 March 2019

வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

haran



ஏறாவூரில் அரிசி ஆலையிலுள்ள நீராவி இயந்திரம் வெடித்ததில் கூலித் தொழிலாளியான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



நீராவி இயந்திரம் வெடித்ததில் காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஏறாவூர் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முஹம்மத் பாறூக் (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அரிசி ஆலையின் நீராவி இயந்திரம் கடந்த புதன்கிழமை வெடித்ததில் குறித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு வார காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments: