Friday, 29 March 2019

மூன்று இளைஞர்கள் மரணம்


(அஸ்மி,  பிரகாஷ் )

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை  பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றிக் கொண்டதில் மூன்று இளைஞர்கள் மரணம் அடைந்துள்ளனர்...
சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .


Thursday, 28 March 2019

வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

haran



ஏறாவூரில் அரிசி ஆலையிலுள்ள நீராவி இயந்திரம் வெடித்ததில் கூலித் தொழிலாளியான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரு மாணவிகள் மாயம்




எஸ். அபிவரன்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்துக்கு கல்வி கற்க சென்ற 17 வயதுடைய இரு மாணவிகள் கடந்த 22 திகதி; காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Thursday, 21 March 2019

ஸ்ரீ பாசுதேசுவரர் திருத்தலத்தின்




அம்பாறை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றாகவும் முப்பெரும் சித்தர்களில் ஒருவரான சித்தானைக்குட்டி சுவாமிகளினால் கோடிட்டு அடியெடுத்து கொடுத்து அமைக்கப்பட்டதுமான பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுதேசுவரர் திருத்தலத்தின் சங்காபிசேகம் நேற்று(20) நடைபெற்றது.

Saturday, 16 March 2019

முதிய பெண்மணி ஒருவருக்கு வீடு




மு.கோகிலன்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஈழத் தமிழர் உதை பந்தாட்ட சம்மேளத்தினால் மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வீடற்ற வறிய நிலையில் வாழும்முதிய பெண்மணி ஒருவருக்கு வீடு வழங்கும் முகமாக  அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (16) இடம்பெற்றது.

Friday, 15 March 2019

15 பல்கலைகழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை


கிழக்கு பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த 15 மாணவர்களுக்கு எதிர்வரும் இரண்டு வாரத்துக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Thursday, 14 March 2019

210 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளை




ச.அபிவரன்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதியாக உள்ள கணவருக்கு சாப்பாட்டிற்குள் பொரித்த மீன் நடுப்பகுதிக்குள் 210 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளை வைத்து கொடுக்க முயன்ற மனைவியான பெண் ஒருவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை (13) பகல் கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்தாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்..

Monday, 11 March 2019

ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய திருக் கொடியேற்றம் நாளை (12)

ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய திருக் கொடியேற்றம் நாளை  (12)  






அக்கரைப்பற்று பனங்காடு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய திருக் கொடியேற்றம்   (12) செவ்வாய்கிழமை ஆலய பிரதம குருவும் மகோற்சவ குருவுமான ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ அ.மூர்த்தீஸ்வரக் குருக்களினால் இடம் பெறும்

Thursday, 7 March 2019

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவன் 125வது ஆண்டு நிகழ்வுகள்





(சசி )

 மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவன் 125வது ஆண்டு நிகழ்வுகள் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11ஆம் திகதி கல்லடியிலுள்ள சிவானந்தா தேசியப்பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளன.

மாண­வி­யொ­ருவர் மீது பாலியல் சேட்டை

அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்தில் பாட­சா­லைக்கு சென்று கொண்­டி­ருந்த< மாண­வி­யொ­ருவர் மீது பாலியல் சேட்டை புரிந்த இரு இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர். ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் எதிர்­வரும் 19 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதி­பதி உத்­த­ர­விட்டார்.

Sunday, 3 March 2019

மகா சிவராத்திரி நேரலையாக


மகா  சிவராத்திரி நேரலையாக ...




உலக இந்து மக்களால் இன்று   அனுஸ்டிக்கப்படும் சிவராத்திரி விரதப்பூசையை சிறப்பித்து பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. 

தொடர்புகளுக்கு.... 0777 51 42 79 )

மகா சிவராத்திரி

பனங்காடு பாசுபதேஸ்வரர் ஆலயத்தில்  (நேரலை ...)



பனங்காடு  பாசுபதேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரின் ஒழுங்கமைப்புடன் ஆலய  பிரதம குரு மூர்த்தீஸ்வரர் குருக்களினால் நான்கு சாம பூஜைகளும் மிகவும் சிறப்பாக இடம்பெறும்   இந்நிகழ்வில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வெளியீடான சிவ வழிபாட்டு மலர் மற்றும் மாசி மாத மகத்துவம் மகா சிவராத்திரியும் எனும்  கையோடு வழங்கிவைக்கப்படவுள்ளது 


Saturday, 2 March 2019

சோபிதாவின் சாதனை ....

தேசிய ரீதியில் முதலிடத்தில் கிருஷ்ணபிள்ளை சோபிதா

அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதியுயர் (சுப்ரா) தரத்துக்குப் பதவியுயர்வு வழங்குவதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில், அக்கரைப்பற்று 09ஆம் பிரிவைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சோபிதா, 361 புள்ளிகளைப் பெற்று, தேசிய ரீதியில் முதலிடத்தில் சித்தியடைந்துள்ளார்.

(எமது வாழ்த்துக்கள்)

கல்வியும் ஆன்மீக விழுமியங்களும் பயிற்சிநெறி

மாணவர்களின் கல்வியும் ஆன்மீக விழுமியங்களும் பயிற்சிநெறி 







ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில்  பிரதேச மாணவர்களுக்கான விழுமியக் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்     ஓர் அங்கமாக விசேட செய்முறை பயிற்சி எதிர்வரும் 25ம் திகதி இடம்பெறவுள்ளது 

வீதிகளுக்கான அடிக்கல்

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரிவுகளில் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமையவுள்ள, தெரிவு செய்யப்பட்ட 13 வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (27) நடைபெற்றது.

குழாய் நீர் விஸ்தரிப்பு


பல ஆண்டுகளாக சுத்தமான குடிநீர் இன்றி அவதியுற்ற மண்முனை தென்மேற்கு பிரதேச மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குழாய் நீர் விஸ்தரிப்பு பணிக்கமைவாக சுத்தமான குடிநீர் இணைப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளதாக அதன் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசலையினை தரமுயர்த்துமாறு கோரிக்கை

வைத்தியசலையினை தரமுயர்த்துமாறு கோரிக்கை 




ஆலையடிவேம்பு பனங்காடு  பிரதேச வைத்தியசாலையினை  தரமுயர்த்தி தருமாறு நல்லாட்ச்சி அரசிடம் மக்கள் வேண்டு கோள்விடுத்துள்ளனர்  ஆலையடிவேம்பு  பிரதேசத்துக்குட்பட பனங்காடு வைத்தியசலையானது மிகவும் முக்கியமான மக்கள் செறிந்து வாழும் கேந்திர நிலையத்தில் அமைந்துள்ளது

அறுவடை நெல் வயல்கள் பாதிப்பு

இயந்திரங்கள் பற்றாக்குறையால்  அறுவடை நெல் வயல்கள் பாதிப்பு 



அம்பாறை மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் அறுவடைகள்  ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும்  காலநிலை மாற்றத்தின்  காரணமாக  பெய்துவந்த மழையினை தொடர்ந்து அறுவடை செய்யப்படவிருந்த நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அறுவடை இயந்திரங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது