வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்ட காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ளடக்கிய வகையில் மது தொடர்பான குற்ற செயல் மற்றும் கலால் திணைக்களத்தினால் அனுமதி பெற்ற நிலையங்களினால் இடம் பெறும் முறைக்கேடுகளை தவிர்ப்பதற்கு விசேட கண்காணிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது என்று இலங்கை மது வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மது வரி ஆணையாளர் நாயகம் ஆர்.சேமசிங்க ஆலோசனைக்கு அமைவாக ஏப்ரல் 27 ஆம் திகதியிலிருந்து மே 3 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த வேலைத்திட்டத்திற்காக கண்காணிப்புகளுக்கான பொறுப்பு திணைக்களத்தின் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கண்காணிப்பு மது வரி திணைக்களத்தின் தலைமையகத்தில் 24 மணித்தியாலமும் செயற்படும் விசேட பொறிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னேடுப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.
எத்தகைய இடத்திலும் இடம் பெறும் மது குற்ற செயல் மற்றும் மது வரி அனுமதி பத்திரம் பெற்ற இடங்களுக்கு அருகாமையில் இடம் பெறும் நிகழ்விற்கு அமைவாக கீழ் கண்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு மது வரி திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், மின்னஞ்சல் முகவரிகள் ஊடாகவும் பெற்றுக் கொள்ளமுடியும்.
தொலைபேசி இலக்கங்கள் : 0112-045077 , 0113-888 832, 0772-602842
பெக்ஸ் : 0112-877882, 0112-877895
மின்னஞ்சல் முகவரி : oiccrime@excise.gov.lk , dcehr@excise.gov.lk
haran
No comments:
Post a Comment