இவ்வருடம் லண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த செல்வி.தாட்சாயிணி நிமலேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வோர் சைலட் கொலன்ட் நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு எஸ்கோ நிறுவனம் கடந்த நான்கு வருட காலமாக நடைமுறைப்படுத்தி வந்த சிறுவர் பங்களிப்பு மற்றும் சிறுவர் உரிமைகளுக்காக பரிந்துரை செய்தல் திட்டங்களில் இருந்து இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரை அப்பகுதி பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு குறித்த பயணம் தொடர்பாக எடுத்தியம்பி ஆலோசனைகளையும் வழங்கி வைத்தனர்.
haran
No comments:
Post a Comment