Monday, 9 April 2018

மின்னல்

haran

(செ.துஜியந்தன்)
கல்முனை தமிழ்ப் பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்பு கிராமத்தில் நேற்றிரவு
11 மணியளவில் மின்னல் தாக்கத்தினால் பல வீடுகளிலுள்ள பெறுமதியான வீட்டு மின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளது.


சேனைக்குடியிருப்பு சேமன் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலுள்ள தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த பத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த தொலைக்காட்சி, குளிர்சாதனம், மற்றும் கணணிகள் உட்பட்ட பல பொருட்டகள் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.

இம் மின்னல் தாக்கத்தினால் வீடுகளிலுள்ள மின் இணைப்புக்கள் வெடித்துச்
சிதறியுள்ளதுடன் மின் இணைப்பும்  செயலிழந்துள்ளது. வீடுகளில்
இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். கல்முனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இடி மின்னல் தாக்கத்துடன் இடையிடையே கடும் மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: