(சிவம்)
சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட ஆலயங்களின் புனரமைப்புக்காக வருடாந்தம் நிதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (07) நாவற்குடா இந்து கலாசார நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 ஆலயங்களுக்கும் அம்பாரை மாவட்டத்தில் 16 ஆலயங்களுக்கும் நிதிகள் வழங்கப்பட்டபோது காரைதீவில் விபுலானந்தர் மணி மண்டபம் அமைப்பதற்காக ரூபாய் 2 மில்லியனுக்கான கடிதமும் நிர்மாணக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டது.
சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைசு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் சுமார் 14 மில்லியன் புனரமைப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
கல்லடி காயத்திரி பீடத்தைச் சேர்ந்த சாம்பசிவ சிவாச்சாரியார், அம்பாரை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன். எஸ்.வியாளேந்திரன் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், ரேப்பியா தவிசாளர் என். அன்னலிங்கம், அமைச்சின் செயலாளர் பொன் சுரேஷ; , மேலதிகச் செயலாளர்களான எஸ். செந்தில்நந்தன், எஸ்.பாஸ்கரன் வழங்குவதையும் அருகில் ஆகியோர் கலந்து கொண்டு நிதிக்கான கடிதங்களை வழங்கி வைத்தனர்.
haran
No comments:
Post a Comment