haran
(சா.நடனசபேசன்)
(சா.நடனசபேசன்)
வெளியான சாதாரணதரப் பரீட்சையில் சம்மாந்துறை கல்விவலயத்தில் உள்ள வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் இரட்டைச் சகோதரர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இம் மாணவர்களுக்கு வேப்பையடியைச் சேர்ந்த தாமோதரம் யோகேஸ்வரன் அவர்களால் துவிச்சக்கரவண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது.
இதில் நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து வேப்பையடி வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி அனீஸ் நாமகள்வித்தியாலய அதிபர் மு.இராஜகோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அதிகஷ்டப் பாடசாலையான வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் வேப்பையடியைச் சேர்ந்த திருச்செல்வம் கோபுராஜ் 9 ஏ சித்தியும் திருச்செல்வம் கோபிநாத் 8 ஏ, பி சித்தியும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்கள்
இவர்களின் வரலாற்றுச் சாதனையினை கேள்வியுற்ற மத்தியகிழக்கு நாட்டில் தொழில்புரிந்து கொண்டிருக்கும் யோகேஸ்வரன் அவர்கள் துவிச்சக்கரவண்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்கிவைத்துள்ளார்.
இவரது இந்தச் சேவையினை பாடசாலையின் நிருவாகம் மற்றும் பெற்றோர்கள் பாராட்டுவதுடன் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment