Saturday, 7 April 2018

பட்டதாரி ,நேர்முகப்பரீட்சை இம்மாதம் 16 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை

தொழிலற்ற பட்டதாரிகளை பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதற்கமைய கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பத்திரிகை அறிவித்தலுக்கு அமைவான நேர்முகப்பரீட்சை இம்மாதம் 16 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மாவட்ட மட்டத்தில் நடத்தப்படவுள்ளது.

நேர்முகப் பரீட்சை தொடர்பில் விண்ணப்பதார்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மூலம் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்று தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

நேர்முகப் பரீட்சை மாவட்ட செயலகங்களில் நடைபெறும்.

கொழும்பு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் பட்டதாரிகள் பயிற்சிக்காக சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை கொழும்பு மாவட்ட செலயத்திலும், மஹரகம பிரதேச செயலகத்திலும் நடத்தப்படவுள்ளது. காலி மாவட்டத்தில் இந்த நேர்முகப் பரீட்சை ஹோல்டிகோலிலும், அம்பாறை மாவட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை ஹாடி உயர்தொழில்நுட்பவியல் கல்லூரியிலும் நடைபெறவுள்ளது. அனுராதபுரத்தில் இந்த பரீட்சை வலிசிங்ஹ ஹரிச்சந்திர மகா வித்தியாலத்திலும் நடைபெறவுள்ளது.
haran

No comments: