Sunday, 22 April 2018

செயலமர்வு

(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தில் அனைத்து மாணவர்களும் பாண்டித்திய மட்டத்தை அடைவதற்கான (யுஊஊஊடு) செயலமர்வு கடந்த ஏப்ரல் 20,21,22 ஆகிய மூன்று நாட்களும் பட்டிருப்பு கல்வி வலயத்தில் தரம் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான அனைத்து மாணவர்களும் பாண்டித்திய மட்டத்தை அடைவதற்கான (ACCCL) செயலமர்வு மட் / பட் / பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் முதல் நாள் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் மன்முனை தென் எருவில் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.வி.திரவியராசா அவர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.
இரண்டாம் நாள் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளரும் இத்திட்டத்தின் ஆலோசகருமான திரு.பூ.உதயகுமார் கலந்து பல்வேறு தொழில் நுட்ப விளக்கங்களை ஆசிரியர்களுக்கு வழங்கினார். மூன்றாம் நாள் செயலமர்வில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. பார்த்தீபன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.







ஆரம்பக் கல்வி ஆசிரியர்களே பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள்- பட்டிருப்பு கல்விப் பணிப்பாளர் ஆர். சுகிர்தராஜன் Rating: 4.5 Diposkan Oleh: chithdassan
haran

No comments: