Monday, 9 April 2018

டெங்கு ஒழிப்பு


மட்டக்களப்பில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று (9) ஒசானம் நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.


மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர் வழிகாட்டலின் கீழ், விசேட தேவையுடையோரைப் பராமரிக்கும் ஒசானம் நிலையத்தின் வளாகத்தினை முழுமையாக தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளினால் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளும் சமூக பணிகளின் அடிப்படையில் விசேட தேவையுடையோருக்கான உலர்வுணவு பொருட்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. இச்சிரமதான பணியில் சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் பிரதம ஜெயிலர் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

No comments: