சட்டவிரோதமான முறையில் காயமடைந்த மாடுகளை கடத்தியவரை மிருகவதைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிசிர பண்டார தெரிவித்துள்ளார்.
இச்சந்தேக நபர் கொக்கடிச்சோலையிலிருந்து மூன்று மாடுகளை காத்தான்குடிக்கு ஏற்றிவந்தபோதே நேற்று (9) இரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
haran
No comments:
Post a Comment