Tuesday, 24 April 2018

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சித்திரைப் புதுவருட ஒன்றுகூடல்



ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் வருடாந்தம் நடைபெறுகின்ற தமிழ் – சிங்கள சித்திரைப் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (23) நண்பகல் 12.00 மணிக்கு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மூவினங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்ததுடன், பிறந்திருக்கும் விளம்பி தமிழ் வருடத்தினைச் சிறப்பிக்கும் வகையிலான அலுவலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகள், வினோத விளையாட்டுக்கள், பாடல்கள், வாழ்த்துரைகள் என்பன இடம்பெற்றன.

இதன்போது கடந்த உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தலின் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ள உத்தியோகத்தர்களின் அறிமுக வைபவம் இடம்பெற்றதுடன், கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய மற்றும் வினோத விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய உத்தியோகத்தர்களுக்கான பரிசில்கள் பிரதேச செயலாளர் தலைமையிலான பதவிநிலை உத்தியோகத்தர்களினால் நிகழ்வின் இறுதியில் வழங்கிவைக்கப்பட்டன.

தொடர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களும் பங்கெடுத்த விசேட மதியபோசன விருந்துபசார நிகழ்வு அங்கு இடம்பெற்றிருந்தது.





























No comments: