Wednesday, 28 September 2016

 அம்பாறையில் 167,000 ஏக்கரில் பெரும்போகச் செய்கை


NEWS BY - KRISH
2016 -2017ஆம் ஆண்டுக்கான பெரும்போகச் செய்கையானது அம்பாறை மாவட்டத்தில் 167,000 ஏக்கரில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், இதற்கான நீர்ப்பாசன வசதியானது சேனநாயக்க சமுத்திரத்திலிருந்து நேரடியாகவும் அச்சமுத்திரத்திலிருந்து சிறிய குளங்கள் மூலமாகவும் செய்து கொடுக்கப்படும் என மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் எல்.எஸ்.சிறிவர்த்தன தெரிவித்தார். விவசாய நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான குழுக் கூட்டம், அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. சேனநாயக சமுத்திரத்திலிருந்து நேரடியாக 76,140 ஏக்கருக்கும் கல்லோயா வலதுகரைக் குளத்திலிருந்து 24,010 ஏக்கருக்கும் பண்ணல்கம, எக்கல ஓயா, அம்பலா ஓயா, பன்னல ஓயா ஆகிய குளங்களிலிருந்து 19,850 ஏக்கருக்கும் நீர்ப்பாசன வசதி கொடுக்கப்படும்.

 இதற்காக சேனநாயக சமுத்திரத்தில் 8,324 அடிக் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 47,000 ஏக்கரும் மழை நீரை நம்பிச் செய்கை பண்ணப்படும் எனவும் அவர் கூறினார்.  

Tuesday, 27 September 2016

ஆலையடிவேம்பில் வீடமைப்பு உதவியாக சீமெந்துப் பொதிகள் வழங்கிவைப்பு


வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினூடாக சீமெந்துப் பூச்சு வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான சீமெந்துப் பொதிகளை வழங்கிவைக்கும் இரண்டாம் கட்ட வைபவம் இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

Monday, 26 September 2016

ஆளில்லா விமானத்தால் பதற்றம்

News By - K.Kirushanthan 

படுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், ஐந்தரை வருடங்களின் பின்னர், இன்று செவ்வாய்க்கிழமை (27) தோண்டியெடுக்கப்பட்டது. 

 யானை தாக்கியதில் ஒருவர் பலி


NEWS BY - KIRUSHANTHAN

அம்பாறை, உகண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானை ஒன்று தாக்கியதில்  கிராமவாசியான டபிள்யூ.பி.விமலசேன என்பவர் உயிரிழந்துள்ளார். 

இன்று திங்கட்கிழமை அதிகாலை அங்கு வந்த குறித்த யானை, அவ்வீட்டு முன்புறத்தில் வைக்கப்பட்டிருந்த  நெல் மூடையை உடைத்து நெல்லை உட்கொண்டுள்ளது. சத்தம் கேட்டு மேற்படி நபர் வெளியில் வந்தபோதே யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.

NEWS BY- KAILAYAPILLAI KIRUSHANTHAN


அம்பாறை, அக்கரைப்பற்று 3ஆம் கட்டை வயல்வெளியிலிருந்து மோட்டார் குண்டு ஒன்றை  ஞாயிற்றுக்கிழமை (25) இரவு பொலிஸார் மீட்டுள்ளனர். 

Sunday, 25 September 2016

NEWS BY- KAILAYAPILLAI KIRUSHANTHAN



அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊறணிப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பாணமைப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாரிய ஆர்ப்பாட்டம்

பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோமாரி  வைத்தியசாலையை தரமுயர்த்தல் மற்றும் குறைபாடுகளை நிவர்த்திக்கக்கோரி கோமாரி பொதுமக்களால் இன்று(25) பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Friday, 23 September 2016

NEWS BY - KIRUSHANTHAN 


பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமாரி களுகொல்ல எனும் பிரதேசத்தில் நேற்று(22) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானதுடன் மேலுமொருவர் படுகாயங்களுடன் கோமாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


பொத்துவில் பிரதேசத்தில் இருந்து திருக்கோவில் பிரதேசத்தை நோக்கி பயணம் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் களுகொல்ல வளைவில் எதிரே வந்த பஸ் வண்டிக்கு வழிவிட முயற்சித்த போதே தடுமாறி தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் இதனால் வீதி அருகில் இருந்த கம்பியுடன்  மோதி இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கோமாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் ஒருவர் மரணமடைந்த நிலையில் படுகாயமடைந்த மேலுமொருவர்  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டார்.


விபத்தில் பலியான இளைஞன் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்தவர் என தெரியவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.


பலியானவரின் சடலம் கோமாரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனா.

சிறந்த ஊடகவியாலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

NEWS BY -  KIRUSHANTHAN 


இன்டர் நியூஸ் சர்வதேச ஊடக நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட "வன் சிறிலங்கா ஜேனலிசம் பொலோசிப்" பயிற்சி கற்கை நெறியின்  சிறந்த ஊடகவியாலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு (20) கொழும்பு-07,   லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச தொடர்புகளுக்கும் உபாயா ஆய்வுக்குமான நிறுவனத்தின் மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது
 

நிகழ்வில் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் சார்பில் பங்கேற்ற ஊடகவியலாளர் வி.சுகிர்தகுமார் தமிழ் மொழி மூலமான வெற்றியாளருக்கான விருதை பெற்றுக் கொண்டதுடன் , சிங்கள மொழி மூலமான வெற்றியாளருக்கான விருதினை ராவய பத்திரிகையின் ஊடகவியலாளர் தரிந்து தனதாக்கி கொண்டார் ,இருவருக்கும் ஸ்மாட் கையடக்க தொலைபேசியும் பரிசாக வழங்கப்பட்டன
 

சமூக பிரச்சினைகள் தொடர்பான சிறந்த கட்டுரைகளை வெளியீடு செய்து சிறப்பாக பயிற்சியினை பூர்த்தி செய்த 8 ஊடகவியலாளர்கள் "மெரிட்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அம்பாரை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த தினகரன் பத்திரிகை நிருபர்கள்  என்.ஹரன்,  வசந்தா அருள்ரெட்ணம், யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவம் செய்த சுமித்தி தங்கராசா, எங்கள் தேசம் நிருபர் அபுபக்கர் பாயிஸ், சுடர் ஓளி நிருபர் சனத் , பிபிசி நிருபர் ராகுல். ராவய பத்திரிகையின் நிருபர் இந்துனில், டிலிசா, உள்ளிட்டவர்கள் சிறந்த மெரிட் விருதினை பெற்றுக்  கொண்டதுடன் வவுனியா ச .அகலிகா ,அம்பாறை  மாவடடத்தினை சேர்ந்த ஏ.எல்.எம்.ஸினால் ,யு .எல்.எம்.றியாஸ் சான்றிதழை பெற்றுக் கொண்டனர்   

Thursday, 22 September 2016

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற கரையோர சுத்தம் பேணும் சர்வதேச தின நிகழ்வு


கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்களம் மற்றும் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வருடத்தின் கரையோர சுத்தம் பேணும் சர்வதேச தின நிகழ்வு உதவிப் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் இன்று (22) காலை இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கரையோரப் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எஸ்.பாபுஜியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ்வைபவம் அக்கரைப்பற்று - 9 கிராம சேவகர் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் தாம்போதியிலிருந்து காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகி, அக்கரைப்பற்று இந்து மயானத்துக்கு அருகிலுள்ள ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம் வரையிலான சுமார் 2½ கிலோமீட்டர்கள் நீளமான கடற்கரைப் பிரதேசத்தைச் சுத்தப்படுத்தும் நிகழ்வாக காலை 11.00 மணிவரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா உள்ளிட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர் திருமதி. என்.டி.எஸ்.எல்.செனேவிரத்ன, ஆலையடிவேம்பு பிரதேச மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.மகேஸ்வரன், மேஜர் ஜயசேன, மேஜர் அபயசேகர மற்றும் கேணல் தினேஷ் நாணயக்கார உள்ளிட்ட அக்கரைப்பற்று இராணுவ முகாமைச் சேர்ந்த சுமார் 60 இராணுவ வீரர்களும், ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்கள் 20 பேரும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் சுமார் 20 பொலிஸ் உத்தியோகத்தர்களும், ஆசிரியர் ரி.சுதாகரன் தலைமையில் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவ, மாணவிகள் 40 பேரும், சின்னமுகத்துவாரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களும், கழிவுகளை இடம்மாற்றும் உழவு இயந்திரங்களுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் திருமதி. விஜயராணி கமலநாதன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சுமார் 10 பேரும் பங்குபற்றியிருந்தனர்.

ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் மற்றும் அக்கரைப்பற்று இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் ஜயசேன ஆகியோரின் இன்றைய கரையோர சுத்தம் பேணும் சர்வதேச தின நிகழ்வு தொடர்பான உரைகளைத் தொடர்ந்து அவர்களால் பாதுகாப்புக் கையுறைகளும், கழிவு சேகரிக்கும் பைகளும் பங்குபற்றுனர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது இடம்பெற்ற குறிப்பிட்ட கடற்கரைப் பிரதேசத்தைச் சுத்தமாக்கும் பணிகளுக்கான தாகசாந்தி மற்றும் காலையுணவு வசதிகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வின் இறுதியில் தமது அழைப்பை ஏற்று குறித்த பணிகளில் இணைந்துகொண்ட அனைத்து பொதுத்துறை உத்தியோகத்தர்கள், படையினர், இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.















Tuesday, 20 September 2016

பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

NEWS BY - KIRUSHANTHAN



கிழக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் அம்பாறை மாவட்டப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அம்பாறை மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. அம்பாறை மகாவாபி விகாரையில் ஒன்றுகூடிய பட்டதாரிகள், அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம்வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, ரீகல் சந்திவரை பேரணியாகச் சென்று மீண்டும் மணிக்கூட்டுக் கோபுரத்தை வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க வீதியை மறித்து பட்டதாரிகள் எதிர்ப்பை வெளிக்காட்டியதை அடுத்து, பொதுமக்களின் போக்குவரத்துக்கான மாற்றுவழியை பொலிஸார் ஏற்படுத்திக் கொடுத்தனர். ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள பெர்ணான்டோ, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாடினார். இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட மாகாண சபை உறுப்பினர், எதிர்வரும் 21ஆம் திகதி பட்டதாரிகளுடனான சந்திப்பை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். 

இரட்டைப் படுகொலை: சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி



NEWS BY-  K.KIRUSHANTHAN

மட்டக்களப்பு -  ஏறாவூர் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, நேற்றுத் திங்கட்கிழமை (19) பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
ஏறாவூர் - முகாந்திரம் வீதியை அண்மித்த பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 11ஆம் திகதியன்று, தாயும் மகளும்; கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கடந்த சனிக்கிழமையன்று (17) கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கயும் நேற்றுத் திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, பொலிஸார்;, இச்சந்தேக நபர்களை தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் அடுத்த 24 மணித்தியாலயங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு நீதவானிடம் கோரினர்.
இதையடுத்தே, இச்சந்தேக நபர்களை 24 மணித்தியாலயங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, 18 September 2016

 சிறையிலிருந்து கைதியின் சடலம் மீட்பு

NEWS BY- K.KIRUSHANTHAN 



மாத்தறை சிறைச்சாலையிலுள்ள அறையொன்றிலிருந்து இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் கைதியொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த நபர், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10 வருடங்களுக்கு சிறைத்தண்டை விதிக்கப்பட்டவராவார். சடலம், மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

NEWS BY - K.KIRUSHANTHAN

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கவேலாயுதரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Friday, 16 September 2016

கருத்தரங்கு

ஜே.எப்.காமிலா பேகம்


-ஊடகம்,ஊடகவியலார்களூக்கான  நெறிமுறைசார்  இரண்டு நாள் கருத்தரங்கு இன்று ( 16.09.2016 ) வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பு கிறீன்காடன் ஹோட்டலில் ஆரம்பமானது.

ஆர்ப்பாடட பேரணி

அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 2,000 ஏக்கர் வயல் காணிகளை வனவள அதிகாரிகள் நில அளவை செய்து கையகப்படுத்தும் செயற்பாட்டைக் கண்டித்து இன்று (15) வியாழக்கிழமை காலை  பிரதேச செயலகத்துக்கு முன்பாக விவசாய அமைப்புகளின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Monday, 12 September 2016

பஸ் களுக்கும் விடுமுறை பயனிகள் தின்டாட்டம்

காமிலா பேகம்.....

இன்று(12) காலை பத்து மணிக்கு பின்னர் ,மட்டக்களப்பு,சம்மாந்துறைக்கான இ.போ.ச .பஸ் சேவைகள் இரவு பத்து மணி வரை இல்லாததால்  கொழும்பில் இருந்து மட்டக்கிளப்பு செல்லும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

Thursday, 8 September 2016

பொறிவெடிகளுடன் இருவர் கைது

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தில் இன்று  வியாழக்கிழமை காலை மிருக வேட்டைக்குச் சென்றதாகக் கூறப்படும் 2 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

புறோய்லர் எனும் அரக்கன்!

பிரேம்.....

வெறுமனே 40  நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடும் புறோய்லர் கோழிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பயங்கரங்களை ஆராயும்போதே இன்றைய அவசர உலகில் எமது அன்றாட வாழ்வில் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள இந்த உணவுப் பொருளால் ஒட்டுமொத்த மனித இனம் எதிர்நோக்கியுள்ள பேராபத்துக்கள் ஆதாரத்தோடு வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன.

Wednesday, 7 September 2016

அரங்கேற்றக் கலையின் பயணக் கண்காட்சி

இலங்கையில் பெண்கள் மற்றும் சமாதானத்தினை கட்டியெழுப்பல் தொடர்பான கற்புல அரங்கேற்றக் கலையின் பயணக் கண்காட்சி   நாட்டின் வடக்கு கிழக்கு தெற்கு பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது 

Tuesday, 6 September 2016

பயணக் கண்காட்சி

இலங்கையில் பெண்கள் மற்றும் சமாதானத்தினை கட்டியெழுப்பல் தொடர்பான கற்புல அரங்கேற்றக் கலையின் பயணக் கண்காட்சி   நாட்டின் வடக்கு கிழக்கு தெற்கு பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது 

மாதிரிக் கிராமவேலைத் திட்டம்

பொத்துவில் பிரதேச செயலக திவிநெகும சமுக அபிவிருத்தி பிரிவினால் நடைமுறைப் படுத்தப்ட்டுவரும்   மாதிரிக் கிராமவேலைத்  திட்டத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான  நிகழ்வு  பொத்துவில் - 16 கிராமசேவகர் பிரிவில் உள்ள அல் - ஹுதாமீள் எழுச்சிக் கட்டிடத்தில் இன்று (2016.09.06) பிரதேசசெயலாளர் தலைமையில் நடைபெற்றது.

Monday, 5 September 2016

ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் இடம்பெற்ற விநாயக சதுர்த்தி சிறப்புப் பூஜை


இந்துக்களின் விசேட நாட்களுள் ஒன்றான விக்கினங்கள் தீர்க்கும் விநாயகக் கடவுளுக்கான விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலக அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் இன்று (05) நண்பகல் இடம்பெற்ற விசேட பூஜைகளில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானின் பேரருளைப் பெற்றேகினர்.

கும்பல் சிக்கியது

கால்நடைகளை திருடிவந்த கும்பல் சிக்கியது 



அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களாக கால்நடைகளை திருடிவந்த குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட 8 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.   

சிவதொண்டரின் ‘அபரக் கிரியைகளும் ஆன்ம ஈடேற்ற மோட்ச மாலையும்’ நூல் வெளியீட்டு வைபவம்


மனிதனின் மரணத்தின் பின் அவனது உடலத்துக்குச் செய்யப்படும் ஈமக்கிரியைகள் தொடர்பாக இந்துமத சித்தாந்தங்கள் கூறும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின் தொகுப்பாக அமைந்த ‘அபரக் கிரியைகளும், ஆன்ம ஈடேற்ற மோட்ச மாலையும்’ நூலின் வெளியீட்டு வைபவம் அக்கரைப்பற்று, மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்று (04) மாலை இடம்பெற்றது.

Sunday, 4 September 2016

ஸ்ரீ மருதடி மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது

அக்கரைப்பற்று ஸ்ரீ மருதடி மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின்  போது 

கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய

கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோட்சவத் திருவிழாவில் இன்று (05)