உலக வங்கியின் பிரதிநிதிகள் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான விஜயம் ஒன்றினை நேற்று(10) மேற்கொண்டனர்.
ஆலையடிவேம்பு திருவள்ளுவர் ஆரம்ப பாடசாலைக்கு வருகை தந்த பேராசிரியரும் உலக வங்கியின் பாடசாலைகள் மேம்பாட்டுக்கான உலக வங்கியின் ஆலோசகருமான உபுல் சொர்ணதார தலைமையிலான குழுவில் மற்றுமொரு பிரதிநிதி மகேன் முத்தையா, அவுஸ்திரேலிய கல்வி நிதிக்கான கருத்திட்ட உத்தயோகத்தர் டன்ஸ்டன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
பாடசாலைகளின் கல்வித்தர உறுதிப்பாட்டை மேற்கொள்ளும் உலக வங்கியின் திட்டத்துக்கு அமைய பாடசாலைகளுக்கு சென்ற அவர்கள் பௌதீக வளம் மற்றும் கல்வி தரம் போன்ற நிலமை தொடர்பில் நேரில் கேட்டறிந்து கொண்டனர்.
முன்னதாக கிழக்கு மாகாணத்தில் ஏற்கெனவே பல கல்வி வலயங்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும் திருக்கோவில் கல்வி வலயம் இணைக்கப்படவில்லை.
இந்நிலையில், வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் கோரிக்கைக்கமைவாக மாகாண கல்வி பணிப்பாளர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக திருக்கோவில் கல்வி வலயம் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டது.
இவ்விஜயத்தின் போது, திருக்கோவில் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன், கே.ஜெயச்சந்திரன், ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் உள்ளிட்டவர்கள் பாடசாலைகளின் நிலைமை தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு விளக்கினர்.
No comments:
Post a Comment