குலான்னுகே விவசாயப் போதனாசிரியர் ர்.ஆ.ஆ.இர்ஷாத் அவர்களின் ஏற்பாட்டில் மாகாண விவசாயத் திணைக்களத்தினால்
தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பாசிப்பயறு விதை அரை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு
மிகவும் சிறப்பான முறையில் செய்கை பண்ணப்பட்டு அறுவடை விழாவானது கடந்த 2.6.2016 அன்று மிகவும்
வெற்றிகரமான இடம்பெற்றது.இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண விவசாயத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட
பிரதி விவசாயப் பணிப்பாளர் னு.ஆ.ளு.டீ.திசாநாயக்க அவர்களும் சிறப்பு அதிதியாக லகுகல வலய உதவி விவசாயப்
பணிப்பாளர் ஆ.ஐ.இஸ்மாலெப்பே அவர்களும் பாடவிதான உத்தியோகத்தர் யு.னு.ஊ.கங்காணி லகுகல விவசாயப்
போதனாசிரியர் திருமதி.மோகனலெட்சுமி ஜெயராஜ் மற்றும் பிரதேச விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் குலான்னுகே விவசாயப் போதனாசிரியர் பாசிப்பயறு செய்கை பற்றியும் பூரண
விளக்கமளித்தார்.இதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் தனது உரையில் தற்போது எமது
மாகாண விவசாயத் திணைக்களத்தால் நடை முறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றியும் பாசிப் பயறு மிகவும்
இலாபம் தரக் கூடிய பயிர் எனவும் எதிர்வரும் காலங்களில் பாசிப் பயறு செய்கையை விஸ்தரிக்க மாகாண விவசாயத்
திணைக்களம் பூரண ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment