Saturday, 25 June 2016

விபத்தில் இளைஞர் பலி

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் கொழும்பைச் சேர்ந்த முகம்மது றயிஸ் (வயது 18) என்பவர் பலியாகியுள்ளார்.

சைக்கிளில் சென்ற குறித்த இளைஞர் தடக்கிக் கீழே விழுந்தபோது, வீதியால் வந்த டிப்பர் ரக வாகனம் மோதியதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
டிப்பர் வாகனச் சாரதி கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments: