Monday, 13 June 2016

கஞ்சாவுடன் ஒருவர் கைது

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 26 வயதுடைய ஒருவரை அம்பாறை, அக்கரைப்பற்று பழைய சினிமா வீதியில்  இன்று திங்கட்கிழமை காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


இச்சந்தேக நபர் கஞ்சா வைத்திருப்பதாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவரிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், இரண்டு கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 திருக்கோவில், விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர், கட்டட நிர்மாண வேலைக்காக அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு வந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


No comments: