Thursday, 23 June 2016

ப்ரடி கமகே மீது தாக்குதல் , விளக்கமறியலில் வைக்க உத்தரவு

 News by- kirushanthan 
ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும் இணைய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ப்ரடி  கமகே மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த  இன்று செவ்வாய்க்கிழமை (14) உத்தரவிட்டார். 

இதேவேளை, குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பொலிஸார் கடந்த 4ஆம் திகதி சைதுசெய்தனர். குறித்த சந்தேகநபர்களை நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இன்று 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

No comments: