Tuesday, 21 June 2016

துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சி


அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் தனியார்; கிளினிக்கு சிகிச்சை பெறச் சென்ற ஏழு வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில்
வைத்தியர் ஒருவரை திங்கட்கிழமை (20) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சிறுமி தனது வாயில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக தனது தந்தையுடன்; மேற்படி தனியார்; கிளினிக்குச் சென்றதாகவும் இதன்போது, இச்சிறுமியை  தனியாக வைத்தியர் பார்வையிடும் அறைக்கு கூட்டிச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த குறித்த வைத்தியர் முயற்சித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பெற்றோரிடம் சிறுமி தெரிவித்ததைத் தொடர்ந்து, பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்  முறைப்பாடு செய்தனர். இந்நிலையில், குறித்த வைத்தியரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்

No comments: