அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் 15 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 20 வயதுடைய ஒருவர்
நேற்றுத் திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி முறைப்பாடு செய்ததை அடுத்து, குறித்த இளைஞனைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இச்சிறுமியின் பெற்றோர் தொமில் நிமித்தம் வெளிநாட்;டுக்குச் சென்றுள்ளதாகவும் சிறுமி பாட்டியுடன் வசித்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாட்டி வீட்டில் இல்லாத சமயம் கடந்த 2ஆம் திகதி வீட்டுக்கு வந்த உறவு முறையான ஒருவர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி வைத்தியப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment