அம்பாறை, தமண பிரதேசத்திலிருந்து பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச்சென்று அப்பிரதேசத்தில் உள்ள ஆற்றில் விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்;.
தமண பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்றுப் பிரதேசம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று 3ஆம் கட்டையைச் சேர்ந்த உமர்லெப்பை பாறூக் (வயது 43), என்பவரும் அக்கரைப்பற்று 1ஆம் குறிச்சியைச் சேர்ந்த மபாஸ் முஹம்மது இஸ்மாயில் றிஸ்லி (வயது 42) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/175286#sthash.kF2t9pCH.dpuf
No comments:
Post a Comment