Thursday, 30 June 2016

சட்டவிரோதமாக மின்சாரம் இருவர் கைது

அம்பாறை  ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வீடுகளுக்கு மின்சாரம் பெற்ற இரண்டு பேரை, புதன்கிழமை (29) இரவு, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Wednesday, 29 June 2016

மீனவரின் சடலம் மீட்பு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள மரண கண்டி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற திருக்கோவில் -04ஆம் கிராம அலுவலர்  பிரிவில் வசிக்கும் 05 பிள்ளைகளின் தந்தையான வடிவேல் வனராஜ் (வயது 58) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகம்

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் 15 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 20 வயதுடைய ஒருவர்

Sunday, 26 June 2016

வனவழிப்பாதை திறந்து விடப்பட்டது

உகந்தையில் இருந்து உங்கள் -  
கை .கிருஷாந்தன் 

கதிர்காமத்துக்கான பாதயாத்திரைக்கான வனவழிப்பாதை  இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை 5.30 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் திறந்து விடப்பட்டது   

Saturday, 25 June 2016

விபத்தில் இளைஞர் பலி

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் கொழும்பைச் சேர்ந்த முகம்மது றயிஸ் (வயது 18) என்பவர் பலியாகியுள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் நடமாடும் சேவை


அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜமீல் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களுக்காக நடாத்தப்பட்ட மாபெரும் நடமாடும் சேவை நிலையமொன்று இன்று (25) காலை 9.30 மணி முதல் அக்கரைப்பற்று, கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

Thursday, 23 June 2016

ப்ரடி கமகே மீது தாக்குதல் , விளக்கமறியலில் வைக்க உத்தரவு

 News by- kirushanthan 
ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும் இணைய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ப்ரடி  கமகே மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த  இன்று செவ்வாய்க்கிழமை (14) உத்தரவிட்டார். 

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பரிசோதனை

நாடு முழுவதும் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிர்காலத்தில் முதலுதவிப் பயிற்சி வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு வைத்திய பரிசோதனை

Wednesday, 22 June 2016

விபத்தில் இருவர் உயிரிழப்பு

அம்பாறை, தமண பிரதேசத்திலிருந்து பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச்சென்று அப்பிரதேசத்தில் உள்ள ஆற்றில் விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்;.

Tuesday, 21 June 2016

ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட உகந்தை முருகன் ஆலய வளாக சிரமதானம்


கிழக்கிலங்கையில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் ஆலயத்தின் வருடாந்த திருவிழாக்காலத்திற்கு முன்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்பட்டுவரும் சிரமதான வேலைத்திட்டமும் விசேட பூஜை வழிபாடுகளும் இம்முறை கடந்த (ஜூன்) 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றன.

இதன்போது உதவிப் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் உட்பட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த சுமார் நூறு உத்தியோகத்தர்கள் இணைந்து இச்சிரமதானப் பணிகளை முன்னெடுத்ததுடன், இரு தினங்களிலும் உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் தொடர்ச்சியான சிரமதான வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக முதல்நாள் சிரமதான வேலைகளில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கவிந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களோடு இணைந்து பங்கெடுத்திருந்தார். ஆலயப் பிரதம குருக்களால் 17ஆந் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் விசேட பூஜை வழிபாடுகள் பிரதேச செயலாளரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டதுடன், அன்றைய தினம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பொங்கல் வைபவமும், நிருவாக உத்தியோகத்தர் ஆறுமுகம் சசீந்திரன் தலைமையில் விசேட பஜனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

குறிப்பிட்ட பூஜை நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆலயத்திற்கு வருகைதந்திருந்த தமிழ், சிங்கள முருகன் அடியவர்கள் பெருமளவில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
























துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சி


அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் தனியார்; கிளினிக்கு சிகிச்சை பெறச் சென்ற ஏழு வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில்

Monday, 20 June 2016

இளைஞர்கள் மீது சட்ட நடவடிக்கை

தனியார் வகுப்புக்களுக்குச் செல்லும் மாணவிகளுக்கு இடையூறு விளைவிக்கும் இளைஞர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

Wednesday, 15 June 2016

ஆலையடிவேம்பில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு


அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பின் (SWOAD) அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்புரி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்களது கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (15) காலை இடம்பெற்றது.

Tuesday, 14 June 2016

சட்ட விரோதமாக ஆற்று மணல்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை, ஆலங்குளம் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி சட்ட விரோதமாக ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு நபர்களில் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் மற்றைய நபருக்கு 15 ஆயிரம் ரூபாயும் அபராதடாக செலுத்துமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி இன்று செவ்வாய்க்கிழமை த்தரவிட்டார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்தகால யுத்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் 65,000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள பொதுமக்களுக்கான வீடுகளை நிர்மாணித்து வழங்கும் வேலைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.

Monday, 13 June 2016

பாசிப்பயறு அறுவடை விழா





குலான்னுகே விவசாயப் போதனாசிரியர் ர்.ஆ.ஆ.இர்ஷாத் அவர்களின் ஏற்பாட்டில் மாகாண விவசாயத் திணைக்களத்தினால்

தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பாசிப்பயறு விதை அரை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு

உலக வங்கியின் பிரதிநிதிகள் விஜயம்



உலக வங்கியின் பிரதிநிதிகள் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான விஜயம் ஒன்றினை நேற்று(10) மேற்கொண்டனர்.

கஞ்சாவுடன் ஒருவர் கைது

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 26 வயதுடைய ஒருவரை அம்பாறை, அக்கரைப்பற்று பழைய சினிமா வீதியில்  இன்று திங்கட்கிழமை காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

Monday, 6 June 2016

இராணுவ முகாமில் தீ

கொஸ்கம இராணுவ  முகாமில் தீ விபத்து ஏற்பட்டு 17 மணித்தியாலங்களுக்கு பிறகு இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வெடிப்பால் ஏற்பட்ட சத்தம் சுமார் 1 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் கேட்டுள்ளது. தீயையடுத்து, வெடித்த குண்டுகளின் துகள்கள் வீசுபட்டு, அருகிலிருந்த வீடுகளின் சுவர்களை துளைத்துச்சென்றுள்ளன.

Thursday, 2 June 2016

பெண் கொலை தாயார் கைது

கனகராசா சரவணன் 

அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் தாயார் ஒருவர் தான் பெற்ற 21 வயதுடைய மகளை அடித்து கொலைசெய்து வீட்டின் பின்னால் நிலத்தில் புதைத்துள்ள சம்பவம் தொடர்பாக தாயாரை  இன்று வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக மத்தியமுகாம் பொலிசார் பொலிசார் தெரிவித்தனர்.

Wednesday, 1 June 2016

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் குரு பூசை



திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் குரு பூசை தினத்தினை முன்னிட்டு 29  ஆலையடிவேம்பு பிரதேச இந்து இளைஞர் அறனெறி பாடசாலையில் ஏற்பாட்டில் குருபூசை நிகழ்வும் கொடிவிற்பனையும் விவேகானந்தா வித்தியாலயத்தில்