Wednesday, 9 March 2016

கட்டாக்காலி மாட்டுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப்பிரிவிற்குட்பட்ட காஞ்சிரம்குடா சந்தியிக்கு அன்மித்த பகுதியில்  (09) இன்று காலை  கட்டாக்காலி மாட்டுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில்
சாரதிபடுகாயம் அடைந்ததாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 31வயதுடைய ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.
விபத்தினால் கை,கால் முறிவடைந்த நிலையில் சாரதி உடனடியாக திருக்கோவில் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
;விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: