Sunday, 20 March 2016

சடலம் மீட்பு ...

அம்பாறை, ஒலுவில் கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை வீரர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை, சடலமாக மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கடற்படை வீரர், திம்புலாகல பகுதியைச் சேர்ந்த நுவான் றோஹன பண்டார (வயது 32) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த கடற்படை வீரர், தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது இதுவொரு கொலையா என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments: