நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள் என்ற தொணிப்பொருளுக்கு அமைய ஆலையடிவேம்பு பிரதேச மாதர் மகாசங்க உறுப்பினர்கள் ஒன்றினைந்து நடாத்திய மாபெரும் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று (10) மாலை அக்கரைப்பற்று தம்மரெத்ன சிங்கள மகாவித்தியாலய மைதானத்தில் மாதர் மகாசங்க தலைவி சி.ரூபி தலைமையில் நடை பெற்றது.
மகளிர் மகா சங்க ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அதிதியாக பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில் பெண்கள் உரிமை தொடர்பிலான உரைகளும் கலைநிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றது.
இதன்போது பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் , மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர். எஸ்.எல்.எப்.சிபாஜா , ஓய்வு பெற்ற வைத்திய அதிகாரி சித்திரா தேவராஜன் , ஓய்வு பெற்ற நிருவாக உத்தியோகத்தர் எஸ்.தமயந்தி , சட்டத்தரணி திருமதி கலைவாசனா, அபிவிருத்தி உத்தியோகத்தர்; ரி. சரோஜினி, நிருவாக உத்தியோகத்தர் ,சரோஜா தெய்வநாயகம் , தாதி லீலா சந்திரஸ்ரீ , (மகாசக்தி தலைவி துளசிமனி மனோகராஜன் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு ;இணைப்பாளர் சத்தியவாணி சைமன் ஆகியோர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment